
லியோ - பரபரப்பு, சர்ச்சைகளுக்கு இனி ஓய்வு
படக்குழுவில் லோகேஷ் கனகராஜ் தவிர வேறு யாரும் இந்தப் படத்தின் புரமோஷனுக்காக பெரிய அளவில் அக்கறை செலுத்தவில்லை. விஜய் படம் என்பதாலேயே இந்தப் படத்திற்கு எப்படியும் ரசிகர்கள் வந்து விடுவார்கள் என்ற அதீத நம்பிக்கையில் இருந்தார்கள். படம் வெளியான பின் இருவேறு விதமான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களைப் போல திறமையான திரைக்கதை இந்தப் படத்தில் இல்லை என்று சிலர் விமர்சிக்கிறார்கள். அதே சமயம் விஜய் படம் முழுவதையும் தாங்கிப்பிடித்து விடுகிறார் என்றும் அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள். படம் வெளியானதுமே விதவிதமான மீம்ஸ்களும் வர ஆரம்பித்துவிட்டது.
"ஜெயிலர்" படம் வந்த போது ரஜினிகாந்தை விஜய் ரசிகர்கள் நேரிடையாகவே விமர்சித்தார்கள். ஆனாலும், படம் வசூல் அள்ளியது. இந்நிலையில் இந்தப் படத்திற்காக விஜய்யையும், லோகேஷயும் ரஜினி ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
விஜய்யை வைத்து "பீஸ்ட்" படம் கொடுத்த நெல்சனை ரஜினிகாந்த் "ஜெயிலர்" படம் மூலம் காப்பாற்றினார். அது போல விஜய்யை வைத்து "லியோ" படத்தைக் கொடுத்துள்ள லோகேஷை ரஜினிகாந்த் அவரது 171வது படம் மூலம் காப்பாற்றுவார் என்றும் வெறுப்பேற்றி வருகிறார்கள்.
"லியோ" சர்ச்சை ஓய்ந்தாலும் ரஜினி, விஜய் ரசிகர்கள் சண்டை அடுத்த சில நாட்களுக்கு ஓயாது என்றே தெரிகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!