
லியோ படம் எப்படி உள்ளது.? - ரசிகர்கள் கருத்து
தமிழகத்தில் இந்த படம் காலை 9 மணிக்கு தான் வெளியாகி உள்ளது. அதேசமயம் மற்ற மாநிலங்களில் இந்தபடம் அதிகாலையிலேயே வெளியாகிவிட்டது. இதனால் மற்ற மாநில ரசிகர்கள் மட்டுமின்றி தமிழகத்தை சேர்ந்த பல ரசிகர்களும் இந்த படத்தை அங்கு சென்று பார்த்துள்ளனர். இதனால் படம் பற்றிய ரிசல்ட் வர துவங்கி உள்ளது.
படம் எப்படி இருக்கு.?
படத்தின் முதல்பாதி சூப்பராக இருப்பதாகவும், இரண்டாம் பாதி சுமார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதேசமயம் படம் விறுவிறுப்பாக நகர்கிறது. நிச்சயம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும். ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் லோகேஷின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது மாஸ்டருக்கு சற்று கூடுதலாகவும், விக்ரமிற்கு கீழாகவும் இந்த படம் இருப்பதாக ரசிகர்கள் கூறி உள்ளனர். மேலும் இந்தபடம் படத்தின் கிளைமாக்ஸில் எல்சியுவை லோகேஷ் சேர்த்துள்ளாராம். அதேசமயம் இதுவரை பார்த்திராத ஒரு விஜய்யை இந்த படத்தில் பார்க்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!