18 நாட்களில் முடிந்த சந்தானம் பட படப்பிடிப்பு
அக் 18, 2023
Advertisement
குலேபகவாலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் சந்தானம் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இன்று இப்படத்திற்கு "80ஸ் பில்ட் அப்" என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் உடன் அறிவித்துள்ளனர். இதில் கதாநாயகியாக பூவே உனக்காக சீரியலில் நடித்த ராதிகா பிரீத்தி நடித்துள்ளார்.
கே.எஸ். ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், முனீஷ்காந்த், ரெட்டின் கிங்ஸ்லி, தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கி வெறும் 18 நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!