
அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்த சிவராஜ்குமார்
ஜெயிலர் படத்தை தொடர்ந்து கேப்டன் மில்லர், அடுத்து தெலுங்கில் ஒரு படம் என சிவராஜ்குமார் மற்ற மொழிகளில் நடிக்க தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் ஆறு வருடங்களுக்கு முன்பே தமிழில் அஜித் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது அதை ஏற்க மறுத்து விட்டார் சிவராஜ் குமார்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது. “அது எந்த படம் என சரியாக நினைவில்லை.. அந்த சமயத்தில் நான் கன்னட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தேன். அதை தவிர்த்து விட்டு தமிழ் படத்தில் நடிக்க சென்றால் என்னுடைய சக நடிகர்களே நான் கன்னட படங்களுக்கு சரியான முன்னுரிமை கொடுப்பதில்லை என குறை சொல்வார்கள் என்பதாலும் கால்சீட் உள்ளிட்ட காரணங்களாலும் அந்த வாய்ப்பை மறுக்கும்படியாக ஆகிவிட்டது” என்று கூறியுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!