
லியோ தெலுங்கு ரிலீஸ் திட்டமிட்டபடி நடக்கும் : வினியோகஸ்தர் தகவல்
படத்தைத் தெலுங்கில் வெளியிடும் வினியோகஸ்தரான நாகவம்சி படம் திட்டமிட்டபடி எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வெளியாகும் என பத்திரிகையாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார். “இது தகவல் தொடர்பு சிக்கலால் எழுந்த ஒரு பிரச்சனை, யாரோ ஒருவர் "லியோ" தெலுங்கு தலைப்பைப் பதிவு செய்துள்ளார். இந்த விவகாரத்தை நாங்கள் சீக்கிரமாகவே தீர்த்துவிடுவோம். இன்றுதான் நீதிமன்ற உத்தரவு பற்றி தெரிய வந்தது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை, சிக்கலில்லாமல் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும்,” என்று கூறியுள்ளார்.
தெலுங்கில் "லியோ" படத்திற்கான முன்பதிவு சிறப்பாக நடந்து வருகிறது. இப்படி ஒரு தடை உத்தரவு வந்ததும் விஜய் ரசிகர்கள் மீண்டும் ஒரு சிக்கலா என அரண்டு போய் உள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!