
இசை வெளியீட்டு உடன் கார்த்திக்கு பாராட்டு விழா
இப்போது அவர் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான 25வது படமாக "ஜப்பான்" படத்தில் நடித்துள்ளார். இதனை ராஜூ முருகன் இயக்கியுள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா வருகின்ற அக்டோபர் 28ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. ஆனால், இது இசை வெளியீட்டு விழா மட்டும் அல்லாமல் கூடுதலாக கார்த்தி 25 படங்களில் நடித்ததற்காக பாராட்டு விழா ஆகவும் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மணிரத்னம் கலந்து கொள்கிறார். மேலும் கார்த்தியை வைத்து இதுவரை படம் இயக்கிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் என அனைவரையும் அழைத்து இவ்விழாவில் கலந்து கொள்ள வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!