
முதல் முறையாக ஹரி இயக்கத்தில் கவுதம் மேனன்
இந்த நிலையில் தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 34வது படத்தில் நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் நடிப்பதைத் தொடர்ந்து இப்போது கவுதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக இந்த படப்பிடிப்பு காரைக்குடி, தூத்துக்குடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சில நாட்களாக இதன் கிளைமாக்ஸ் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!