
சமகாலத்து சாக்லேட் கிருஷ்ணன் ‛கிரேஸி மோகன் - கமல்
கிரேஸி மோகனுக்கு இன்று பிறந்தநாள். அவரைப்பற்றி நடிகர் கமல் வெளியிட்ட பதிவில், ‛‛என் அன்புக்குரிய நண்பர் கிரேசி மோகனின் பிறந்த நாள் இன்று. நகைச்சுவை உணர்வைத் தோலாகத் தகவமைத்துக் கொண்டிருந்த மனிதர். அந்தத் தோலுக்குள்ளே, ஆழ்ந்த மரபிலக்கியப் பயிற்சி, தொன்மம் தொடர்பான அகன்ற வாசிப்பு, தீவிர உணர்வுகளின் கனம் உணரும் திறன் அத்தனையும் கொண்டிருந்தவர். அதனாலேயே எங்களுக்கெல்லாம் சமகாலத்து சாக்லேட் கிருஷ்ணனாக இருந்தவர்,"" என குறிப்பிட்டு அவருடன் இருக்கும் பழைய போட்டோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!