
லியோ - காட்சிகள் ரத்தால், குறைந்த பிரிமியர் வசூல்
இதனிடையே, ஐமேக்ஸ் பிரிமியர் காட்சிகளுக்கான முன்பதிவை திடீரென ரத்து செய்துவிட்டார்கள். குறித்த நேரத்தில் "கன்டென்ட்" டெலிவரி நடக்காததே அதற்குக் காரணம். தயாரிப்பு நிறுவனத்தின் தவறு இது. ஐமேக்ஸ் காட்சிகளுக்கு அதிகமான முன்பதிவு நடந்திருந்தது. தற்போது அந்தக் கட்டணங்களை திருப்பி அளித்து வருகிறார்கள். இதனால், 9 லட்சம் யுஎஸ் டாலர் வசூல் என்பது 7 லட்சம் யுஎஸ் டாலராக குறைந்துவிட்டது.
முன்பதிவில் 1 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த சாதனைக்கு வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!