
மம்முட்டி - ஜோதிகாவின் காதல் ரிலீஸ் எப்போது?
இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்துள்ளார் ஜோதிகா. மம்முட்டியுடன் இவர் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை. அது மட்டுமல்ல பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் ஜோதிகா நடித்துள்ளார். ‛தி கிரேட் இந்தியன் கிச்சன்" படத்தை இயக்கிய ஜியோ பேபி தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
ஆறு மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டாலும் ரிலீஸ் தேதி குறித்து விவரம் அறிவிக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் வரும் நவம்பர் மாத இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!