
விஷால் 34வது படத்தில் இணைந்த கனல் கண்ணன்
கடந்த சில மாதங்களாக இந்த படப்பிடிப்பு காரைக்குடி, தூத்துக்குடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதன் கிளைமாக்ஸ் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த சண்டை காட்சியை கனல் கண்ணன் இயக்கி வருகிறார். இதனை விஷால் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டு, ‛‛மூன்று சண்டை காட்சிகள் திலீப் சுப்பராயன் இயக்கத்தில் முடித்த பிறகு எனது விருப்பமான கனல் கண்ணன் மாஸ்டர் உடன் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது,"" என போட்டோ உடன் பகிர்ந்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!