
லியோ - காட்சி நேரத்தை உடனடியாக மாற்றிய தியேட்டர்கள்
இதனால், சில தியேட்டர்களில் காலை 8 மணி காட்சிக்கே முதல் காட்சியை நடத்துவதாக முன்பதிவை ஆரம்பித்தனர். இந்நிலையில் நேற்று அரசு தரப்பில் மீண்டும் புதிய ஆணை ஒன்றை வெளியிட்டார்கள். அதன்படி காலை 9 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவில் 1.30 மணிக்குள் அந்த 5 காட்சிகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள். இவற்றை மீறுகிறார்களா என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கண்காணிக்கவும் அறிவுறுத்தியிருந்தார்கள்.
நேற்று மாலை வெளியான அந்த ஆணையைத் தொடர்ந்து ஆன்லைன் முன்பதிவு இணையதளங்களில் காலை காட்சி 9 மணிக்கு என்பதை உடனடியாக மாற்றினார்கள். இருப்பினும் கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள சில தியேட்டர்களில் இன்னும் காலை காட்சி 8 மணி என்பதை மாற்றாமல் இருக்கிறார்கள். அத்தியேட்டர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரியவில்லை.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!