
லியோ முதல் காட்சி 9 மணிக்கு மட்டுமே : புதிய அரசு ஆணை
அக்டோபர் 20ம் தேதி காலை 9 மணி காட்சியிலிருந்து மட்டுமே பல தியேட்டர்கள் முன்பதிவுகளை ஆரம்பித்தன. படம் வெளியாகும் நாளுக்கான முன்பதிவுகளை ஆரம்பிக்கவில்லை. இந்நிலையில் புதிய அரசு ஆணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், “அனைத்து தியேட்டர்களும் ஒரு சிறப்புக் காட்சியை நடத்தலாம். காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் காட்சிகள் நள்ளிரவில் 1.30 மணிக்குள்ளாக முடிக்க வேண்டும்,” எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால் காலை 8 மணி காட்சிகளை நடத்த முடியாது.
கடந்த முறை வெளியிட்ட அரசு ஆணையில் விஜய்யை "தளபதி விஜய்" எனக் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் புதிய ஆணையில் வெறும் "லியோ" படம் என மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!