
ஜிவி பிரகாஷுக்காக கதை எழுதி வரும் யோகிபாபு
சமீபத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் கிங்ஸ்டன் என்கிற படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்றது. கடல் சார் பின்னணியில் உருவாகும் இந்த திரில்லர் படத்தில் யோகிபாபுவும் அவருடன் இணைந்து முக்கிய இடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே திரிஷா இல்லைனா நயன்தாரா படத்திலிருந்து ஜிவி பிரகாஷ் உடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார் யோகிபாபு.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் முதன்முதலாக நீங்கள் தயாரிப்பில் இறங்கியுள்ள படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த படம் மறக்க முடியாத ஒன்றாக இருப்பதற்கு உங்களுடன் சேர்ந்து நானும் பிரார்த்தனை செய்கிறேன். அடுத்ததாக நீங்கள் ஹீரோவாக நடிக்கும் நானும் முக்கிய வேடத்தில் நடிக்கும் நமது இரண்டாவது படத்திற்காக ஒரு கதாசிரியராக ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டு இருக்கிறேன். அந்த இரண்டாவது படத்திற்கும் ஆல் த பெஸ்ட் என்று கூறியுள்ளார் யோகிபாபு.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!