
சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்ட கட்டில் படம்: நவம்பர் 24ம் தேதி வெளியாகிறது
இந்த படம் தயாராகி ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு சில விருதுகளையும் வென்றது. இந்த நிலையில் படம் நவம்பர் 24ம் தேதி தியேட்டர்களில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் ஈ.வி.கணேஷ் பாபு கூறியதாவது: ஒரு கட்டில் 3 தலைமுறைகளை தாண்டி எப்படி பயணிக்கிறது என்பதுதான் படத்தின் கதை. நமது பழமையையும், கலாசாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிற படம். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். அவர்தான் எனது குறும்படத்திற்கும் இசை அமைத்தார். அந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இந்த படத்திற்கும் தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏற்கெனவே பல விருதுகளை வென்றுள்ள படம். இந்த படத்தில் நடித்தவர்கள் இப்போது பிசியான நடிகர்களாகி விட்டார்கள். கட்டில் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!