
அமெரிக்காவில் 999 தியேட்டர்களில் லியோ வெளியீடு
அமெரிக்காவில் மட்டும் 999 தியேட்டர்களில் இப்படத்தை வெளியிட உள்ளதாக படத்தை அங்கு வெளியிடும் வினியோக நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரையில் வேறு எந்த ஒரு தமிழ்ப் படமும் இவ்வளவு தியேட்டர்களில் திரையிடப்பட்டதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
படம் வெளியாக இன்னும் ஏழு நாட்கள் உள்ள நிலையில் அங்கும் 7 லட்சம் யுஎஸ் டாலர்களுக்கும் அதிகமான தொகையை முன்பதிவு மூலம் மட்டுமே வசூலித்துள்ளது. இது இன்னும் அதிகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுகே-வில் 55 ஆயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். மற்ற நாடுகள் சிலவற்றிலும் எதிர்பார்த்ததை விடவும் முன்பதிவு சிறப்பாக நடப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!