
ஒரே நேரத்தில் 2 படங்களாக உருவாகும் ஒரே நபரின் சுயசரிதை ; எதிர்பார்ப்பில் அஜ்மல்
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் யாத்ரா 2 என்கிற பெயரில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் மம்முட்டியுடன் ஜெகன்மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் ஜீவாவும் நடித்துள்ளனர். இரண்டாம் பாகம் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசியல் பயணத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் இந்த படம் திரைக்கு வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் மகி ராகவ் தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.
இன்னொரு பக்கம் அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னணி சினிமா நடிகர்கள் பற்றி பரபரப்பான சுயசரிதை படங்களை எடுத்து வரும் பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா இதே ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து வியூகம் என்கிற பெயரில் படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் அஜ்மல் அமீர் நடித்துள்ளார்.
ஒரே நேரத்தில் இப்படி இரண்டு இயக்குனர்கள் ஒரே நபரின் சுயசரிதையை படமாக எடுத்து வருவதால் இரண்டும் எப்படி உருவாகி இருக்கும், வெளியாகும்போது என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் ரசிகர்களிடம் எப்படி வரவேற்பு பெரும் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகர் அஜ்மல். அது மட்டுமல்ல யாத்ரா-2 படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் அஜ்மல்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!