
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ஹிந்திப் படத்தில் நயன்தாரா?
இதுவரை வேறு எந்தப் ஹிந்திப் படத்திலும் நடிக்க நயன்தாரா சம்மதிக்கவில்லையாம். அதே சமயம் பாலிவுட்டின் பிரபல இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்க உள்ள "பைஜு பாவ்ரா" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நயன்தாரா நடிக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ரன்வீர் சிங், ஆலியா பட் நடிக்கும் படம் இது.
"ஜவான்" படத்திற்குப் பிறகு ஹிந்தி ரசிகர்களுக்கும் பிடித்த கதாநாயகியாக நயன்தாரா மாறியுள்ளார். முக்கியப் படம் என்பதால் அவர் இப்படத்தில் நடிக்க சம்மதிக்கலாம் என்றே சொல்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!