
2024 கோடை விடுமுறையில் வெளியாகுமா இந்தியன் 2?
இப்படத்திற்கான டப்பிங்கை கமல்ஹாசன் பேச ஆரம்பித்துள்ளார் என நேற்று வீடியோவுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். கமல்ஹாசன் ரசிகர்கள் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாகவே இப்படம் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தின் கதாநாயகன் டப்பிங் பேச ஆரம்பித்துவிட்டால் அந்தப் படம் ஏறக்குறை வெளியீட்டிற்கத் தயாராகிவிட்டது என்றுதான் அர்த்தம். இதற்குப் பிறகு பின்னணி இசை, இதர வேலைகள் நடந்தால் படம் முடிந்துவிடும். அடுத்த நான்கைந்து மாதங்களுக்கு அந்த வேலைகள் நடக்கலாம்.
எனவே, 2024 கோடை விடுமுறையில் "இந்தியன் 2" வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!