ஹிந்தியில் படம் தயாரிக்கும் லோகேஷ் கனகராஜ்?
அக் 09, 2023
Advertisement
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் தொடர் வெற்றிப் பெற்றது. இப்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கியுள்ளார். அக்., 19ல் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது. இயக்குனராக மட்டும் அல்லாமல் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க போகிறார் லோகேஷ். முதல் இரண்டு படங்களை தனது உதவி இயக்குனர்களை வைத்து தயாரிக்கிறார்.
இது அல்லாமல் பாலிவுட்டில் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம். இதில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உள்ள முன்னனி நடிகர்களை வைத்து மல்டி ஸ்டாரர் படமாக உருவாக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!