
2 படங்களில் ஒப்பந்தமாகி உள்ள வனிதா மகள்
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: சின்ன வயதில் இருந்தே ஜோவிகாவுக்கு சினிமாதான் உலகம். அதனால்தான் படிப்பு போதும் நடிப்புதான் இனி என்று முடிவெடுத்தாள். சினிமா கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினாள். என்னிடம் 2 கார்கள் இருந்தும் அவளை மெட்ரோ ரயிலில்தான் பார்த்திபன் அலுவலகத்திற்கு அனுப்புவேன். அப்போதுதான் ஒரு உதவி இயக்குனரின் வலி அவளுக்குத் தெரியும்.
ஜோவிகா "பிக் பாஸ்" செல்லும் முன்னரே இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்கவும் கமிட்டாகி விட்டார். ஒரு தமிழ் படம், ஒரு தெலுங்கு படத்தில் ஜோவிகா ஹீரோயினாக நடிக்க கமிட்டான பின்புதான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதை சொல்வதில் எனக்குப் பெருமை. இவ்வாறு வனிதா கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!