
50 மில்லியன் பார்வைகளைக் கடந்த லியோ டிரைலர்
நான்கு மொழிகளிலும் சேர்த்து தற்போது 51 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது இந்த டிரைலர். தமிழில் 36 மில்லியன், ஹிந்தியில் 9 மில்லியன், தெலுங்கில் 6 மில்லியன், கன்னடத்தில் 7 லட்சம் என இப்படத்திற்கு மொத்தமாக 51 மில்லியன் பார்வைகள் இரண்டே நாட்களில் கிடைத்துள்ளது. தமிழைத் தவிர தெலுங்கு மற்றும் ஹிந்தியில் எதிர்பார்த்ததை விடவும் வரவேற்பு அதிகமாகி உள்ளது.
விஜய் பட டிரைலர்களில் இதுவரையில் வந்த படங்களில் "பீஸ்ட்" டிரைலர் 63 மில்லியன்களைப் பெற்று அவரது படங்களின் டிரைலர்களின் பார்வையில் முதலிடத்தில் உள்ளது. அதே சமயம் அஜித் நடித்துள்ள "துணிவு" டிரைலர் 66 மில்லியன் பார்வைகளுடன் தமிழ்ப் படங்களின் டிரைலர்களில் முதலிடத்தில் உள்ளது. இந்த சாதனையை "லியோ" முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடத்தில் உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!