நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தில் நடிக்கும் ரியாஸ் கான்
அக் 05, 2023
Advertisement
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
முதற்கட்டமாக இதன் பாடல் காட்சியை படமாக்கி வருகின்றனர். இந்த பாடல் காட்சிக்கு பிரபுதேவா நடனம் அமைத்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்தில் மைக் மோகன், ஜெயராம், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த் என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடிக்கின்றனர்.
இந்த நிலையில் பிரபல நடிகர் ரியாஸ் கான் இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரபுதேவா உடன் அமர்ந்துள்ள போட்டோ வெளியாகியுள்ளது. இப்போது சமூக வலைதளங்களில் அந்த போட்டோ வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு விஜய்யுடன் பத்ரி, சுறா ஆகிய படங்களில் ரியாஸ் கான் நடித்திருந்தார். நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் படத்தில் ரியாஸ் கான் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!