
லியோ பட டிரைலரை பொதுவெளியில் திரையிட போலீஸ் அனுமதி மறுப்பு
இணையத்தில் வெளியிடப்படும் டிரைலர் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி தியேட்டர் நிர்வாகம் தியேட்டர் அருகே பெரிய திரையில் வெளியிட ஏற்பாடு செய்ததது. இதற்காக கோயம்பேடு காவல் நிலையத்தில் அனுமதி கேட்டபோது பாதுகாப்பு காரணங்களை கூறி காவல் நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.
இது விஜய் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தியேட்டர் நிர்வாகம் கமிஷனர் அலுவலத்தில் அனுமதி பெற முயற்சித்து வருகிறது. என்றாலும் கோயம்பேடு காவல்நிலையம் எடுத்துள்ள முடிவுக்கு மாறாக கமிஷனர் உத்தவிட வாய்ப்பில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!