
மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ கீதா
சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தவர் தற்போது "சில நொடிகளில்" என்ற படத்தின் மூலம் மீண்டும் தயாரிப்பாளராக, நடிகையாக திரும்பி வந்திருக்கிறார். பரத்வாஜ் என்பவர் இயக்கி உள்ளார். இதில் கீதாவுடன் ரிச்சர்ட் ரிஷி, யாஷிகா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.
லண்டனில் வசிக்கும் திருமணமான தம்பதியைப் பற்றிய திகில் கதையாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் முழுக்க லண்டனில் நடந்துள்ளது. அபிமன்யு சதானந்தன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். பாடல்களுக்கு மசாலா காபி, ஸ்டாகாட்டோ மியூசிக் பேண்ட், ஜார்ன் சுர்ராவ், தர்ஷனா கே.டி, ரோஹித் மாட் ஆகியோர் இசை அமைத்துள்ளனர். பாலிவுட் இசை அமைப்பாளர் ரோஹித் குல்கர்னி பின்னணி இசை அமைத்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!