
25 வயது இளைஞனாக மாறும் விஜய்
அக் 03, 2023
Advertisement
லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடிக்கிறார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. இந்த படத்தில் விஜய் 50 வயது அப்பா வேடம் மற்றும் 25 வயது மகன் வேடத்தில் நடிக்கிறார். இந்த 25 வயது மகன் வேடத்தில் நடிக்கும் விஜய்யின் கேரக்டரை கிராபிக்ஸ் உதவியுடன் ஏஐ டெக்னாலஜியில் அவரை இளைஞராக காண்பிக்கப் போகிறார்கள். இதற்காகத்தான் சமீபத்தில் விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் அமெரிக்கா சென்று விஜய்யின் உடலை 3டி ஸ்கேன் செய்து அதற்கான பரிசோதனை நடத்தினார்கள். அதுமட்டுமின்றி இளம் வயது விஜய்யின் ஆக்ஷன் காட்சிகளையும் ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் படமாக்குவதற்கும் திட்டமிட்டுள்ளார் வெங்கட் பிரபு. இப்படியொரு செய்தி வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் வட்டாரத்தில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!