
லூசிபர் 2 - மலையாளத்தில் நுழையும் லைக்கா
தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கில், “கைதி நம்பர் 150”, ஹிந்தியில் ‛‛குட்லக் ஜெர்ரி, ராம் சேது"" ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். தற்போது "லூசிபர் 2" படத்தின் மூலம் மலையாளத் திரையுலகிலும் நுழைந்துள்ளார்கள்.
“எல் 2 இ - எம்புரான்" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது லைக்கா. பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், பிருத்விராஜ், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
லைக்கா நிறுவனம் மலையாளத் திரையுலகில் வருவதற்கு படத்தின் கதாநாயகன் மோகன்லால் வரவேற்பு தெரிவித்து, “மலையாளத் திரையுலகத்திற்கு "எல்2இ - எம்புரான்" படம் மூலம் வரும் லைக்கா புரொடக்ஷன்ஸை எல் டீம் சார்பாக வரவேற்பதில் மகிழ்ச்சி,” என்று குறிப்பிட்டுள்ளார். இப்படத்தை மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!