
தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி
அவர் நடித்த முதல் ஹிந்திப் படமான "ஜவான்" படத்திற்காக மட்டும் ஐந்தாறு பதிவுகளைப் போட்டார். அதே சமயம் அவர் நடித்து இரு தினங்களுக்கு முன்பு வெளிவந்த "இறைவன்" படத்திற்காக போனால் போகிறதென்று ஒரே ஒரு பதிவை மட்டும் போட்டிருந்தார். மற்றபடி அவர் இன்ஸ்டாகிராம் தளத்தை ஆரம்பித்திருப்பது அவரது சொந்த நிறுவனத்தின் புரமோஷனுக்காகத்தான் என்பது பின்னர்தான் தெரிய வந்தது.
மலேசியாவில் நடைபெற்ற அவரது கம்பெனியின் ஆரம்ப விழாவுக்கு கணவர் விக்னேஷ் சிவனுடன் சென்றுள்ளார். நயன்தாரா அவரது நிறுவனத்தின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் தவறில்லை. அது போல அவர் நடிக்கும் படங்களின் நிகழ்வுகளுக்கும் கலந்து கொள்ள வேண்டும் என திரையுலகில் தெரிவிக்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!