
லியோ ஆடியோ விழா ரத்து- ஆதங்கத்தில் விஜய் ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்!!
இந்த நேரத்தில் லியோ படத்தின் ஆடியோ விழா ரத்தானதால் விஜய்யின் ரசிகர்கள் மிகப்பெரிய கொந்தளிப்புக்கு ஆளாகி உள்ளார்கள். இதற்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கம் கொடுத்தபோதும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. லியோ ஆடியோ விழா ரத்தானதின் பின்னணியில் அரசியல் இருப்பதாகவே கருதுகிறார்கள். அதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் மன்றத்தை சேர்ந்த ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளார்கள். அதில், ‛ஆடியோ லான்ச் இல்லைன்னா என்ன, ஆட்சிய புடிச்சிட்டா போச்சி" என்ற வாசகங்களுடன் போஸ்டரை வெளியிட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!