
விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி
இந்த நிலையில் ஸ்வாதி நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள "மந்த் ஆப் மது" என்கிற படம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்வாதியிடம் உங்கள் கணவருடனான விவாகரத்து செய்தி உண்மையா, இல்லையா ? இதுபற்றி உங்கள் விளக்கம் என்ன என கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஸ்வாதி, “இதுபற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. நான் 16 வயதிலேயே சினிமாவிற்கு வந்து விட்டேன். சினிமாவில் எப்படி நடந்து கொள்வது, பேசுவது என்பது எனக்கு அவ்வளவாக அப்போது தெரியவில்லை. இப்போது ஒரு தொழில் முறை நடிகராக எல்லாவற்றுக்கும் நானே சில விதிமுறைகளை வகுத்துள்ளேன். அதன்படி இந்த விஷயத்திற்கும் இப்போது நடைபெறும் நிகழ்வுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அது மட்டுமல்ல நான் என்னுடைய பர்சனல் வாழ்க்கையைப் பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை. அதனால் உங்கள் கேள்விக்கு நான் பதில் அளிக்க போகவில்லை” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!