
லியோ சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய்
அப்படத்தைப் பாராட்டி பல சினிமா பிரபலங்கள் அப்போதே டுவீட் செய்திருந்தனர். இந்நிலையில் சற்று முன் ஷாரூக்கானுக்கு வாழ்த்து தெரிவித்து விஜய் டுவீட் போட்டுள்ளார். அதில், “பிளாக்பஸ்டர் வெற்றிக்கு வாழ்த்துகள், ஷாரூக்கான், அட்லீ, மற்றும் மொத்த படக்குழுவுக்கு… லவ் யு டூ ஷாரூக் சார்,” என விஜய் வாழ்த்தியுள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு ஷாரூக் டுவிட்டரில் நடத்திய "சாட்"டில் விஜய் ரசிகர்களின் சோஷியல் மீடியா கணக்கு ஒன்றின் பதிவுக்கு பதிலளித்த ஷாரூக் டுவீட்டிற்கான பதிலாக தனது வாழ்த்தைப் பதிவு செய்துள்ளார் விஜய்.
"லியோ" படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து குறித்து சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அது பற்றி எதுவும் சொல்லாமல் "ஜவான்" படத்திற்கு விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!