9 ஆண்டுகள் கழித்து ரீ என்ட்ரி கொடுக்கும் சங்கீதா
செப் 26, 2023
Advertisement
மலையாளம் மற்றும் தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்து எல்லாமே என் ராசாதான் படத்தில் ராஜ்கிரண் ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சங்கீதா. அதன்பிறகு விஜய்யுடன் இணைந்து பூவே உனக்காக படத்தில் நடித்த பின்னர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் ஒளிப்பதிவாளர் சரவணனை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார் அதன் பிறகு 14 வருடங்கள் நடிக்காமல் இருந்தவர், 2014ல் நகரவர்த்தி நடுவில் நான் என்கிற படத்தில் நடித்தார்.
அந்த ஒரு படத்துடன் மீண்டும் சினிமாவை விட்டு ஒதுங்கியவர் தற்போது ஒன்பது ஆண்டுகள் கழித்து குஞ்சாக்கோ போபன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள "சாவேர்" என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். டினு பாப்பச்சன் என்கிற இயக்குனர் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். வரும் செப்டம்பர் 28ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இனிமேல் தொடர்ந்து நடிப்பேன் என சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது ரசிகர்களுக்கு உறுதி அளித்துள்ளார் சங்கீதா.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!