
காவிரி விவகாரம் - கர்நாடகாவில் லியோ வெளியாகுமா ?
தமிழகத்திற்கு அதிக மழைநீரைத் தரும் வடகிழக்குப் பருவமழை துவங்கும் வரை இந்த காவிரி விவகாரம் சூடான நிலையிலேயே இருக்கும். நவம்பர் மாதம்தான் அப்பருவமழையின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்நிலையில் அக்டோபர் 19ம் தேதி விஜய் நடித்துள்ள "லியோ" படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கன்னடத்திலும் இப்படத்தை டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். நேரடியாகவும் கர்நாடகா முழுவதும் படம் வெளியாக உள்ளது. அம்மாநில உரிமையாக சுமார் 15 கோடிக்கு வியாபரம் நடந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
ரஜினிகாந்த் நடித்து வெளியான "ஜெயிலர்" படம் கர்நாடகவில் மட்டும் சுமார் 75 கோடி வசூலித்துள்ளது. அதைவிட அதிகத் தொகையை "லியோ" படம் வசூலிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. காவிரி போராட்டம் கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ளதால் செப்டம்பர் 28 வெளியாக உள்ள தமிழ்ப் படங்கள் மற்றும் வரும் வாரங்களில் வெளியாக உள்ள படங்கள் பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!