
துபாய் புறப்பட்டது விடாமுயற்சி குழு : அஜித் எப்போது செல்கிறார்?
விஜய்யின் "லியோ" படம் முடிந்து வெளியீட்டிற்குக் காத்திருக்கும் நிலையில் அவரது 68வது படமும் விரைவில் ஆரம்பமாக உள்ளது. "வாரிசு, துணிவு" ஒரே நாளில் வெளியான நிலையில் விஜய் அடுத்தடுத்து போய்க் கொண்டேயிருக்க, அஜித் அப்படியே தேங்கிவிட்டாரே என அவரது ரசிகர்கள் வருத்தப்பட ஆரம்பித்தனர்.
இந்நிலையில் "விடாமுயற்சி" குழுவினர் சில தினங்களுக்கு முன்பு துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அங்கும் அபுதாபி உள்ளிட்ட இடங்களிலும் அக்டோபர் 4 முதல் கட்டப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அங்கு, அஜித், த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்க உள்ளார்களாம். அஜித் ஓரிரு நாட்களில் துபாய் கிளம்ப உள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, விஜய்யின் 68வது படத்தின் படப்பிடிப்பும் இன்னும் சில நாட்களில் சென்னையில் ஆரம்பமாக உள்ளது என்பது கூடுதல் தகவல்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!