
விஜய் 68வது படத்தின் பூஜை குறித்து தகவல் இதோ
செப் 25, 2023
Advertisement
‛லியோ" படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன்முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் அரவிந்த்சாமி, சினேகா, பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை நிகழ்வு அடுத்த மாதம் அக்டோபர் 2ம் தேதி அன்று சென்னையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லியோ படம் வெளிவந்த பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!