
சமூக நீதியும், சமூக பார்வையும் கொண்ட படமே ‛தீ இவன்
படம் குறித்து இயக்குனர் ஜெயமுருகன் கூறியதாவது: பராசக்தி, மாமன்னன், விடுதலை படவரிசையில் சமூக பார்வை கொண்ட படம் தான் "தீ இவன்". இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் நவரசங்களையும் கொட்டி இருக்கிறார். யார் பட்டத்தை யார் வேண்டுமானாலும் அடையலாம் ஆனால், நவரசநாயகன் பட்டத்தை யாரும் அடைய முடியாது. அவருக்கு நிகர் அவர் தான். அந்த வித்தையை இந்த படத்தில் பார்க்கலாம்.
அதே சமயம் ஆழமான கலாச்சாரத்தைச் சொல்லும் போது. “ஆம்பள கெட்டா வாழ்கைபோச்சு பொம்பள கெட்டா வம்சமே போச்சு” என்று சொல்வார்கள் அதன்படி ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த ஆனோ, பொண்னோ கலாச்சாரம் மீறி படி தாண்டி விட்டால். அது அவர்கள் வாழ்வை மட்டுமல்ல அவர்கள் சந்ததியையே சமாதி ஆக்கிவிடும் என்பதையும், “தாலிகட்டாம தாயவாதும் தாலிகட்டாம தாரமா வாழ்வதும் தரங்க கெட்ட செயல்” என்றும் சொல்வார்கள். அதுபோல முறையற்ற வாழ்கை வாழ்பவர்கள் அவர்கள் வாழ்வுமட்டு மல்ல அவர்களின் சந்ததிகளின் வாழ்வும் எப்படி சீரழிந்து சின்னா பின்னமாகிறது என்பதையும், “ஆள்பவர்கள் மட்டுமல்ல வாழ்பவர்களும் நல்லவர்களாக இருந்தால்தான் நல்ல சமூகம் படைக்க முடியும்” என்ற சமூக நீதியையும் சொல்லும் சமூகப் பார்வை கொண்ட படம். கார்த்திக் படத்தின் கதையை கேட்டதும் அவர் வாங்கும் சம்பளத்தில் முன்றில் ஒரு பங்கை குறைத்துக் கொண்டார். அவர் நடித்து முடித்த பிறகு கொடுக்க வேண்டிய 3 லட்சம் ரூபாய் பணத்தையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!