
இமயமலை பாபாஜி குகையில் தியானம் செய்த ஆத்மிகா
அது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் ஆத்மிகா, ‛‛எனக்கு தெய்வீக அழைப்பு ஒன்று வந்த போது அங்கு பயணித்தேன். இந்த பயணம் கடினமாகவும் மரண அனுபவத்தை எதிர்கொள்ளும் பயணமாகவும் இருந்தது. என்றாலும் பாபாஜியின் குகையில் நுழைந்து தியானத்துக்கு உட்கார்ந்த போது அது ஆழமானதாக இருந்தது. என்னுடைய வாழ்நாளில் இதுபோன்ற சக்தியை நான் அனுபவித்ததில்லை. இந்த தியானத்திற்கு பிறகு நிபந்தனையின்றி பாபாஜியை குருவாக ஏற்றுக் கொண்டேன். உலகில் உள்ள எந்த ஒரு மனிதரும் தங்களுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது பாபாஜியின் குகைக்கு சென்று தியானம் செய்து அதை அனுபவிக்க வேண்டு""ம் என்று ஆத்மிகா அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!