
ஷங்கரின் கேம் சேஞ்சர் படப்பிடிப்பு ரத்து : காரணம் என்ன?
கடந்த வாரம் இப்படத்தின் முக்கிய சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஆரம்பமாகி நடக்க வேண்டியிருந்தது. ஆனால், பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. படத்தில் நடிக்க வேண்டிய சிலரது தேதிகள் கிடைக்கவில்லை என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் படத்தின் கதாநாயகன் ராம் சரணுக்கு முகத்தில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், டாக்டர் அவரை பத்து நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அடுத்த மாதத்திற்கு படப்பிடிப்பைத் தள்ளி வைத்துள்ளார்களாம். அடுத்த வருட கோடை விடுமுறைக்காவது இப்படம் வெளிவருமா என்று காத்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தள்ளிப் போவதால் வெளியீடும் மேலும் சில மாதங்கள் தள்ளிப் போகலாம் என்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!