
சந்திரமுகி 3 நடந்தால் ரஜினிகாந்த் நடிப்பாரா ?
18 ஆண்டுகளுக்குப் பிறகு "சந்திரமுகி 2" படத்தை இந்த வாரம் வெளியிட உள்ளார்கள். ஆனால், முதல் பாகத்தில் நடித்த வடிவேலு தவிர அப்படத்தில் நடித்த யாரும் இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை. இரண்டாம் பாகத்தின் முடிவில் "சந்திரமுகி 3" படத்திற்கான தொடர்பு ஒன்றையும் வைத்துள்ளாராம் இயக்குனர் பி.வாசு.
இந்த "சந்திரமுகி 2" எதிர்பார்த்தபடி வெற்றி பெற்று வசூலைக் குவித்தால் 3ம் பாகம் உருவாக வாய்ப்புள்ளது. முதல் பாகத்தில் நடித்த ரஜினி நடிப்பாரா அல்லது இரண்டாம் பாகத்தில் நடித்த ராகவா லாரன்ஸ் நடிப்பாரா என்பது அதற்கான கதை முழுவதுமாகத் தயாரான பின்தான் தெரிய வரும்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!