
1500 மில்லியன் சாதனையைக் கடந்த ரவுடி பேபி
திரைப்பட டிரைலர்கள், டீசர்கள், பாடல்கள், காட்சிகள் என பலவற்றை யு டியூப் தளத்தில் இலவசமாகப் பதிவேற்றி அதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடிகிறது. அதிகமான பார்வைகளைப் பெறும் படங்களுக்கு தியேட்டர்களிலும் வரவேற்பு அதிகமாகக் கிடைக்கிறது.
தமிழ்த் திரையுலகில், ஏன் இந்தியத் திரையுலகத்திலேயே 1500 மில்லியன் பார்வைகளைப் பெற்ற முதல் சினிமா பாடல் என்ற பெருமையை "மாரி 2" படத்தில் இடம் பெற்ற "ரவுடி பேபி" பாடல் பிடித்துள்ளது. 1500 மில்லியன் அதாவது 150 கோடி பார்வைகள் என்பது சாதாரணமானதல்ல. இன்றும் கூட தினமும் அப்பாடலை லட்சக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர்.
பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ் எழுதி தீ-யுடன் பாடிய பாடல் "ரவுடி பேபி". தமிழ் சினிமா இசையுலகில் இது ஒரு மகத்தான சாதனை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!