
தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ள மண்டேலா
அப்படத்தைத் தற்போது தெலுங்கில் "மார்ட்டின் லூதர் கிங்" என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்கள். அறிமுக இயக்குனர் புஜா கொல்லுரு இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழில் யோகி பாபு நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் சம்பூர்ணேஷ் பாபு நடித்துள்ளார். நரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 27ம் தேதி வெளியாக உள்ளது. தமிழைப் போலவே தெலுங்கிலும் இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என படக்குழுவினர் எதிர்பார்க்கிறார்கள்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!