
சத்தமின்றி 75வது படத்தில் நடித்து வரும் நயன்தாரா
இந்த படங்கள் தவிர்த்து நயன்தாரா சத்தமின்றி தனது 75 வது படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த படத்தில் ஜெய் நடித்து வருகிறார். ராஜா ராணி படத்திற்கு பிறகு நயன்தாராவுடன் அவர் நடிக்கும் படம் இதுவாகும். இவர்களுடன் சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், அச்சுத் குமார், சச்சு, பூர்ணிமா ரவி, ரேணுகா, சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசையமைக்கிறார்.
ஜீ ஸ்டூடியோஸ், ஒய்நாட் ஸ்டூடியோஸ், டிரைடென்ட் ஆர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!