
நயன்தாரா நடிக்கும் ‛மண்ணாங்கட்டி
இந்நிலையில் இவரின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் ப்ளாக் ஷிப் டுயுட் விக்கி இயக்கும் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா, யோகி பாபு நடிக்கின்றனர். ‛கோலமாவு கோகிலா" படத்திற்கு பின் இருவரும் இணைந்து இந்த படத்தில் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு "மண்ணாங்கட்டி" என பெயரிட்டு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று(செப்., 18) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். சான் ரோல்டன் இசையமைக்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!