
‛கேம் சேஞ்சர் பாடல் லீக் : அதிர்ச்சியில் ஷங்கர் படக்குழு ; சைபர் கிரைமில் புகார் அளித்த தயாரிப்பாளர்
இந்த படத்தில் இருந்து பாடல் ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகும் முன்பே சமூகவலைதளங்களில் லீக் ஆகி படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை பலரும் சமூகவலைதளங்களில் வைரலாக பரப்பி உள்ளனர். கோடிகள் போட்டு எடுக்கப்பட்டு வரும் படத்தின் பாடலை இப்படி ஒரு நொடியில் லீக் செய்து விட்டார்களே... என இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் தில் ராஜூ உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதனிடையே இந்த பாடலை வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தயாரிப்பாளர் தில் ராஜூ ஐதராபாத் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த லீக் ஆடியோவை பரப்பும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள தில் ராஜூ, சமூகவலைதளத்தில் அதை உடனடியாக நீக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!