
ஹேங் ஓவர் பாணியில் உருவாகும் எனக்கு என்டே கிடையாது
அறிமுக இயக்குநர் விக்ரம் ரமேஷ் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளதுடன் படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராகவும் நடித்துள்ளார். தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கதாநாயகியாக ஸ்வயம் சித்தா நடித்துள்ளார். மேலும் சிவகுமார் ராஜு, முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், தளபதி ரத்னம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலாச்சரண் இசையமைத்துள்ளார்.
படம் குறித்து தயாரிப்பாளரும் படத்தின் ஹீரோக்களில் ஒருவருமான கார்த்திக் கூறும்போது, “தேவையில்லாத விஷயத்தில் தலையிட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்கிற கருத்தை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலேயே படம் பார்ப்பவர்களை கதைக்குள் இழுத்து சென்றுவிடும். இந்த படம் ஒரு வீட்டிற்குள்ளேயே நடைபெறும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் அதிக காட்சிகளில் மது பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் நாங்கள் சொல்ல வந்த விஷயத்தை சொல்வதற்கு அப்படிப்பட்ட காட்சிகள் தேவைப்பட்டது. எந்த ஒரு மெசேஜையும் இந்த படத்தின் மூலமாக நாங்கள் வலிந்து சொல்லவில்லை” என்கிறார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!