
சல்மான் கான் திருமணத்திற்கு பிறகு தான் எனது திருமணம் : விஷால்
அந்த பெண்ணும் வேறு ஒருவரை திருமணம் செய்துவிட்டு செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் தற்போது, “சல்மான் கான் திருமணம் செய்யட்டும். அதன்பிறகு நான் திருமணம் செய்கிறேன்” என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் விஷால். அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் ஹிந்தியிலும் வெளியாகியுள்ள நிலையில் அங்கே புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேட்டியளித்துள்ளார் விஷால்.
அதில் அவரது திருமணம் பற்றி கேட்கப்பட்டபோது, “இதற்கு முன்னதாக என் நண்பன் ஆர்யா திருமணம் செய்யட்டும். பிறகு நான் செய்கிறேன் என்று கூறினேன். அவர் திருமணம் செய்தபிறகு மீண்டும் அதே கேள்வியை கேட்கிறார்கள். பிரபாஸ் திருமணம் செய்யட்டும் என்று கூட சொல்லலாம். ஆனால் சல்மான் கான் திருமணம் செய்யட்டும் அதன் பிறகு நான் செய்கிறேன் என்று சொல்வது தான் இப்போது சரியாக இருக்கும்” என்று சமாளிப்பாக பதில் கூறியுள்ளார் விஷால்.
திருப்பதியில் சாமி தரிசனம்
தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் விஷாலுக்கு ‛மார்க் ஆண்டனி" முக்கியமான படமாகும். இதனால் படம் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி திருப்பதி கோயிலுக்கு சென்று அங்கு ஏழுமலையானை தரிசனம் செய்தார். சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த விஷால் நிருபர்களிடம் கூறும்போது, “நான் நடித்துள்ள மார்க் ஆண்டனி படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் திரைக்கு வருகிறது. படத்தின் வெற்றிக்காக ஏழுமலையானை சரண் அடைந்து இருக்கிறேன். நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்காக வங்கியில் கேட்டுள்ள கடன் விரைவில் கிடைத்துவிடும். எங்களின் பதவிக்காலம் முடிவதற்குள் நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம்” என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!