
இரண்டு வெர்சன்களாக வெளியாகும் லியோ : லண்டன் விநியோகஸ்தர் அறிவிப்பு
இந்த நிலையில் இங்கிலாந்தில் இந்த படத்தை வெளியிடும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் லியோ படம் வெளியாகும் முதல் வாரத்தில் படத்தில் எந்த கட்டும் இல்லாமல் அப்படியே திரையிடுவோம்.. இந்த படத்தை எந்த கட்டும் இல்லாமல் பார்க்க விரும்பும் ரசிகர்களின் உணர்வை மதிப்பதால் படத்தின் ஒவ்வொரு பிரேமும் முக்கியமானது.
அதே சமயம் ஒரு வாரம் கழித்து குடும்பத்தினருடன் அனைவரும் பார்க்கும் விதமாக 12A சான்றிதழுடன் இந்தப் படம் வேறு ஒரு வெர்ஷனில் திரையிடப்படும். தேவையான அளவு பார்வையாளர்கள் லியோ படத்தை உள்ளது உள்ளபடி பார்த்து விட்டார்கள் என தெரிய வந்ததும் இந்த பேமிலி பிரெண்ட்லி வெர்ஷன் திரையிடப்படும் என்று கூறியுள்ளனர்.
லோகேஷ் கனகராஜின் படங்களில் அதிக அளவில் வன்முறை காட்சிகள் இடம் பெறுவது வாடிக்கை. சமீபத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கூட லண்டனில் வெளியாவதில் சென்சார் கெடுபிடிகளால் பிரச்சனைகளை சந்தித்தது. அதனாலேயே இந்த படத்தை இரண்டு வெர்ஷன்களாக வெளியிட விநியோக நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!