பாலிவுட்டில் சாய்பல்லவி : அமீர்கான் மகனுக்கு ஜோடி ஆகிறார்
செப் 14, 2023
Advertisement
பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகன் ஜூனைத்கான். இவர் தற்போது சினிமாவில் அறிமுகமாகிறார். யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழில் வெளியான "லவ் டுடே" படத்தின் ரீமேக் ஆகும். இதில் ஜூனைத்கான் ஜோடியாக ஸ்ரீதேவி மகள் குஷி கபூர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஜூனைத்கான் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சுனில் பாண்டே இயக்கும் இந்த படம் காதல் கதை என்று கூறப்படுகிறது.
வட இந்திய இளைஞன் ஒருவனுக்கும்,தென்னிந்திய பெண்ணுக்கமான காதல் கதை என்கிறார்கள். எல்லை, மொழி கடந்து காதல் பேசும் இந்த படம் இன்றைய சூழ்நிலையில் முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள். ஏற்கெனவே பல பாலிவுட் பட வாய்ப்புகளை மறுத்து வந்த சாய்பல்லவி, இந்த படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு செல்கிறார். இந்த படத்தையும் யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது என்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!