ரஜினி படத்திற்கு முன் நடிப்பில் இறங்கும் லோகேஷ் கனகராஜ்
Advertisement
Advertisement
ரஜினி படத்திற்கு முன் நடிப்பில் இறங்கும் லோகேஷ் கனகராஜ்
செப் 13, 2023
அ நிறம் | அளவு
Advertisement
விஜய் நடித்துள்ள லியோ படத்தை இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ், அடுத்தபடியாக ரஜினி நடிக்கும் 171 வது படத்தை இயக்கப் போகிறார். அனிருத் இசை அமைக்கும் அந்த படத்திற்கு அன்பறிவ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்கள். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் நேற்று முன்தினம் வெளியான நிலையில் தற்போது இன்னொரு புதிய தகவலும் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், ரஜினி நடிக்கும் 171 வது படத்தை இயக்குவதற்கு முன்பே ஒரு படத்தில் நடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். அன்பறிவ் இயக்கும் இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் , அனிருத் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் . இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!