
யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் படம்: தென்காசியில் தொடங்கியது
இந்த படத்தை 23 பிரேம்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சஞ்சய் ராகவன் மற்றும் ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் மது அலெக்சாண்டர் இணைந்து தயாரிக்கிறார்கள். ஜெய் என்ற புதுமுகம் இயக்குகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இது காமெடி கலந்த கிராமத்து குடும்ப கதை என்று கூறப்படுகிறது. தென்காசி, குற்றாலம் பகுதியில் ஒரே கட்டமாக படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!